மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜோதிமணி: ஆனால்...

போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜோதிமணி: ஆனால்...

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்த வேண்டும் என இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, இன்று பிற்பகல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கியும், அதனைச் செயல்படுத்தவில்லை என்று கரூர் ஆட்சியர் பிரபு சங்கருக்கு எதிராக எம்.பி.ஜோதிமணி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆட்சியர் சமாதானம் பேசியும் போராட்டத்தை அவர் முடித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று ஜோதிமணியுடன் வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் உள்ளிருப்பு போராட்டத்தைக் கைவிட்டார்.

போராட்டம் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “AIDP முகாம் நடத்தப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது, சில மூத்த அமைச்சர்கள் பேசினார்கள். முதல்வரைச் சந்திக்கவுள்ளேன். கண்டிப்பாக முகாம் நடத்த வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவேன்” என்றார்.

தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. முதல்வர், காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி. நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 26 நவ 2021