மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் : மோடி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் : மோடி

இன்று (நவம்பர் 26) நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கி அரசியலமைப்பு தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. இது சட்டத்தின் தொகுப்பு மட்டுமல்ல பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் அரசியலமைப்பு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும். அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பானது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையைச் சிலர் வெளிப்படையாகப் பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வதாகத் தெரிவித்த அவர், 26/11 மும்பை தாக்குதல் குறித்தும் பேசினார்.

அரசியலமைப்பு நிகழ்ச்சியைக் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரசைத் தாக்கி பேசிய பிரதமர் மோடி, ஒரு குடும்பத்துக்காக, அந்த குடும்பத்தால் கட்சி நடத்தப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், ஒரு கட்சி பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தால் நடத்தப்படுகிறது என்றால், அது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஜனநாயகத் தன்மையை இழக்கும்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படுகிறது. ஜனநாயக பண்பை இழந்த கட்சிகள் எப்படி ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 26 நவ 2021