மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

நீலகிரிக்குப் புதிய ஆட்சியர்!

நீலகிரிக்குப் புதிய ஆட்சியர்!

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்த இன்னசென்ட் திவ்யா, கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். ஆட்சியராகப் பொறுப்பேற்றதில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை இந்தியா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றில் முன்மாதிரியாகவும் திறமையாகவும் செயல்பட்டார். கொரோனா காலத்தில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 100 சதவிகிதத் தடுப்பூசி செலுத்தி முதல்வரின் பாராட்டையும் பெற்றார்.

யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரிசார்டுகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்து வந்தார். அந்தச் சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டு இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வந்தது. அப்போது யானை வழித்தடங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற அனுமதியில்லாமல், அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்தில், அவரை பணியிட மாற்ற செய்ய அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ''யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது'' என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தி பிரியதர்ஷினி பணியிட மாற்றம் செய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் என்பவரை நியமித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று (நவம்பர் 26) காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் பதவி ஏற்கிறார். இதற்கு முன்பு, இவர் நகராட்சி நிர்வாகத்தின் இணை ஆணையராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 26 நவ 2021