மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 2,05,585 மி.க.அடியாக உள்ளது. அதாவது 91.66% கொள்ளளவு நீர் உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பாயும் பாலாற்றில் 1903ஆம் ஆண்டுக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 1903-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலாற்றிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாக பொதுப் பணித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று பாலாற்றிலிருந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பாலாற்றில் 100 தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர், பொன்னை அடுத்த மேல்பாடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “ஆறுகளில் தண்ணீர் குறைந்த பிறகு தான், தரைப்பாலம், குளம் சேதமடைந்தது குறித்துக் கணக்கெடுத்துச் சீரமைக்கப்படும். இவ்வளவு மழை வரும் என்று நினைக்கவில்லை. தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் கட்டவுள்ளோம். இதில் பாலாற்றில் 100 தடுப்பணைகள் இந்த ஆண்டில் கட்ட போகிறோம்” என்றார்.

-பிரியா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வியாழன் 25 நவ 2021