மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

வேதா இல்ல சாவி எப்போது கொடுக்கப்படும்?

வேதா இல்ல சாவி எப்போது கொடுக்கப்படும்?

வேதா இல்ல சாவி எப்போது தீபா, தீபக் தரப்புக்கு கொடுக்கப்படும் என்பது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த அதிமுக அரசால், இயற்றப்பட்ட ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அதோடு இந்த தீர்ப்பின் நகல் பெற்ற மூன்று வாரங்களில் வேதா இல்லத்தின் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் நடவடிக்கை எடுக்குமானால், அதை எதிர்கொள்ளவும் தயார் என்றும் மேல்முறையீட்டு வழக்கிலும் தங்களுக்குச் சார்பாகத்தான் தீர்ப்பு வரும் என்றும் தீபா, தீபக் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயராணியிடம், 3 வாரத்தில் சாவியை கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு எப்போது செயல்படுத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, "தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வியாழன் 25 நவ 2021