மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு!

ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு!

கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது. இந்த மாநாட்டில், 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் 34,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து 485 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,960 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதன்படி மொத்தம் ரூ.35,208 கோடி ரூபாய் முதலீட்டில், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,681 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 13 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 நிறுவனங்களின் வணிக உற்பத்தியைத் தொடங்கி வைத்தார்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான திறன்மிகு மையம்

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த ஒரு திறன்மிகு மையத்தினை டிட்கோ நிறுவனம், டசோ சிஸ்டம்ஸ் (M/s Dassault Systems) நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது. 212 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள, இத்திறன்மிகு மையம், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல்திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கும்.

இதன் மூலமாக, தமிழகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதுடன், ஏற்கெனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தப் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

அதுபோன்று தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கையையும், முதலீட்டாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-க்கான கைப்பேசி செயலியையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

நேற்று கையெழுத்தான ஒப்பந்தங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி என 22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021