மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

பொங்கலுக்குத் தயாராகும் ஆவின் நெய் பாட்டில்கள்!

பொங்கலுக்குத் தயாராகும் ஆவின் நெய்  பாட்டில்கள்!

பொங்கல் பண்டிகைக்கு ஆவின் நெய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2 கோடிக்கும் அதிகமான நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2021 தீபாவளி பண்டிகைக்காக அரசுப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்குவதற்கு 100 டன் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவதற்காக டெண்டர் விதிமுறைகளைத் திருத்தியது தொடர்பாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வர் உத்தரவின் பேரில், அனைத்து துறையினரும் ஆவினில் ஸ்வீட் வாங்க வேண்டும் என்று சிறப்பு ஆணையைத் தலைமைச் செயலாளர் அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

இதனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆவினில் இந்த ஆண்டு விற்பனை நடந்ததாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். கடந்த ஆண்டு 55 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆவின் ஸ்வீட் இந்த ஆண்டு 83 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக கூறினார்.

இந்தச் சூழலில் பொங்கல் பண்டிகைக்கு முதன்முறையாக ஆவின் நெய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், “2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை முதல்வர் அறிவித்தார். அதில் ஆவின் சார்பாகத் தயார் செய்யப்படும் நெய்யும் இடம் பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியையும் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் பயன்படும் தொழிலாகக் கருதுகின்றனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் அதில் முதலிடம் பால் வளத்திற்குத்தான் உள்ளது. ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது கால்நடை விவசாயிகள் பயன்பெறுவர்” என்று கூறியுள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021