மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

அதிமுக வழிகாட்டும் குழு கலைப்பு? பலவீனமாகும் பன்னீர்

அதிமுக வழிகாட்டும் குழு கலைப்பு? பலவீனமாகும் பன்னீர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று (நவம்பர் 24) 10.30 மணிக்குத் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதேவேளையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அதிமுக வழிக்காட்டு குழு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்த சம்பவம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் டென்ஷனை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் மா.செ.க்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உங்கள் கருத்துகளைச் சொல்லலாம் என்றதும், சசிகலாவுக்கு ஆதரவாகவும், கட்சி தலைமையை விமர்சித்தும் பேசி வரும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மைக் பிடித்து பேச ஆரம்பித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த அனைத்து மாவட்ட செயலாளர்களும் எழுந்து அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க சொல்லி கடிதம் கொடுத்தோம். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கொஞ்சம் காட்டமாக, “அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு கூட்டத்திற்கு வருகிறார். அவருக்கு தலைமை மீது பயம் இல்லை. இனி தலைமையை யார் விமர்சித்து பேசினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இதையடுத்து, அன்வர் ராஜா எழுந்து மன்னிப்பு கேட்டு இருக்கையில் அமர்ந்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, “அனைத்து முடிவுகளையும் தலைமை எடுக்கும்போது, வழிகாட்டுதல் குழு எதற்கு? அந்த குழுவுக்கு அதிகாரத்தை கொடுங்கள் இல்லை என்றால் கலைத்துவிடுங்கள்” என்றார்.

"வழிகாட்டும் குழுவை நியமிக்கும் போதே பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே யாருடைய ஆதரவாளர்களை அதிகம் இடம் பெறச் செய்வது என்ற போட்டி ஏற்பட்டது. ஆனால் இருவரது ஆதரவாளர்களும் ஏறக்குறைய சம அளவில் இடம் பெற்றனர். இந்த நிலையில் நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்கச் சென்ற போது தனக்கு மிகவும் நெருக்கமான நம்பகமான ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்றிருந்தார். பிரபாகர் பன்னீர் செல்வத்தின் பட்டியல் மூலமாக வழிகாட்டும் குழுவில் இடம் பிடித்தவர்.

இந்தப் பின்னணியில்தான் வழிகாட்டும் குழுவையே கலைத்துவிடலாம் என்ற எடப்பாடியின் விருப்பத்தை இன்றைய கூட்டத்தில் செங்கோட்டையன் எதிரொலித்துள்ளார். இதன் மூலம் வழிகாட்டும் குழு உறுப்பினர்களை வைத்து பன்னீர்செல்வம் நடத்தி வரும் அரசியலுக்கு செக் வைக்க இருக்கிறார் எடப்பாடி.

இதே நேரம், கூட்டத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் பேசும் போது நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. வரக்கூடிய பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் .அதற்காக அனைவரும் ஒற்றுமையாகப் பாடு பட வேண்டும். திமுகவின் குற்றங்களைக் கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறினர்” என்கிறார்கள் சில மா.செ.க்கள்.

-வணங்காமுடி

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

புதன் 24 நவ 2021