மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ஒருவருக்கு எதற்கு இரு நினைவிடங்கள்?: நீதிபதி கேள்வி!

ஒருவருக்கு எதற்கு இரு நினைவிடங்கள்?: நீதிபதி கேள்வி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அதிமுக அரசு அரசுடைமையாக்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்தும், வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் சார்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாகச் சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை என்பதால் அரசின் உத்தரவைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட எங்களிடம் ஆலோசிக்காமல் வேதா இல்லத்துக்கு இழப்பீடு நிர்ணயித்து அதனை நீதிமன்றத்தில் செலுத்தியது தவறு என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை. பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 24) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஷேஷசாயி, வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது. அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனத் தீர்ப்பு வழங்கினார்.

வேதா இல்லத்தைக் கையகப்படுத்த நீதிமன்றத்தில் செலுத்திய ரூ. 67.9 கோடி இழப்பீட்டுத் தொகையை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த தீர்ப்பின் நகல் கிடைத்த மூன்று வாரத்திற்குள் வேதா இல்லத்தின் சாவியைச் சென்னை மாவட்ட ஆட்சியர் தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி தொகை நிலுவையிலிருந்தால் அதனை வருமான வரித்துறை வசூலிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பின் போது, ஒரே நபருக்கு எதற்கு இரண்டு நினைவிடங்கள்?. கடற்கரையில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது, வேதா இல்லத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021