மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம்: அமைச்சர் மா.சு

கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம்: அமைச்சர் மா.சு

கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லாண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் பி.எஸ்.ஏ., தொழில்நுட்பத்துடன்கூடிய ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில் இன்று(நவம்பர் 24) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தமிழ்நாடு அரசுடன் இணைந்து மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவி செய்து வருகிறார்கள்.

நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவிகிதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். உலக அளவில் கூட தடுப்பூசி செலுத்துவதில் 85 சதவிகிதத்தில் தான் உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அந்த நாட்டிலேயே இல்லாமல் வேறு நாட்டிற்கு சென்றுவிடுவதால் இவ்வாறு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்தவணை தடுப்பூசியை 76 சதவிகிதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 44 சதவிகிதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கிராமங்களுக்குச் சென்று வீடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் நேற்று ஒரே நாளில் 3.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் இரண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

முதலமைச்சரால் தனியார் மருத்துவமனைகளில் தனியார் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 340 ஆக உள்ளது.

இதுவரை இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 ஆக உள்ளது. கையிருப்பு என்பது தனியார் மருத்துவமனைகளில் இல்லை. வடநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாத் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே உள்ள விதிமுறைப்படி கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி விரைவாக கிடைக்காது என்பதால், முதல்வரிடம், கொரோனா பணியில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடப்பாண்டு 1500 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது இந்தியாவில் இதுவரை நடைபெறாதது. முதல்வர் ஒன்றிய அரசிற்கு குறிப்பாக பிரதமர், அமைச்சர்களுக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் விளைவாலும், தாங்கள் ஒன்றிய அரசின் சுகாதார துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து வலியுறுத்தியதாலும் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாலையில் சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பதால் தடுப்பூசி பயன்படுத்தாமலேயே காலாவதியாகும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இறந்தவருக்கு தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு கேட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துவிட்டதாக கூறினார்கள். தொழில்நுட்ப கோளாறு ஒருமுறைதான் நடக்கும் என்பதால் இதுபோன்று மீண்டும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதக தெரிவித்தார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021