மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ஜெ இல்லம் யாருக்கு?: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜெ இல்லம் யாருக்கு?: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தைத் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று அதிமுக அரசின் சார்பில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும் வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. 2020 மே 22ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஆட்சியர் கட்டுப்பாட்டுக்குள் போயஸ் இல்லம் கொண்டு வரப்பட்டு வருவாய்த் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து, தீபா, தீபக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதுபோல வேதா இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அதைக் கையகப்படுத்தி, அந்த தொகை நீதிமன்றத்தில் செலுத்தத் தென் சென்னை வருவாய்க் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்குகளை நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார்.

இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில், வேதா இல்லத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் 2021 ஜனவரி 28ஆம் தேதி, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் 2.30 மணிக்குச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கினார். அதோடு, வேதா இல்லத்தை மூன்று வாரத்திற்குள் ஜெ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதா வருமான வரித் தொகை எவ்வளவு செலுத்த வேண்டுமோ அதை அவர்கள் இருவரும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 24 நவ 2021