எஸ்எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய முதல்வர்!

politics

திருச்சியில் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 21ஆம் தேதி இரவு ஆடு திருட்டு கும்பலை விரட்டிச் சென்ற போது, அந்த கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், திருச்சியிலிருந்து சென்னை வந்த பூமிநாதன் குடும்பத்தினர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தனர். அப்போது, பூமிநாதன் மனைவி கவிதா மற்றும் மகன் குகனுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கவிதாவிடம் முதல்வர் வழங்கினார். அதுபோன்று, விரைவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது டிஜிபி சைலேந்திர பாபு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *