மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 அக் 2021

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு உத்தரவு அனுப்பியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தார், தொழில் கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் குறிவைத்து அக்டோபர் 18ஆம் தேதி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர்.

அதைப் பற்றி முழுமையான செய்திகளை மின்னம்பலம்.காம் தமிழின் முதல் தினசரி பத்திரிகையில், அக்டோபர் 20ஆம் தேதி,10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த’ விஷய’பாஸ்கர்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

விஜிலென்ஸ் ரெய்டு வரும் என்று நீண்ட நாட்களாகக் காத்திருந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையாகத் துடைத்துப் பெருக்கி சுத்தமாக வைத்திருந்தார்கள். ஆனால், விஜயபாஸ்கரின் விளையாட்டுகளைத் தெரிந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சொத்துகள் விவரத்தையும், 2016, 2011இல் கொடுத்துள்ள சொத்து விவரங்களையும் கையில் எடுத்து வைத்திருந்தனர். விஜயபாஸ்கர் குடும்பத்தின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு இருக்கும் என்று விஜிலென்ஸ் வட்டாரத்தில் தெரிவித்ததை பதிவிட்டிருந்தோம்.

ரெய்டு செய்த விஜிலன்ஸ் அதிகாரிகள், நேற்று அக்டோபர் 20ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பினாமிகள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களை முடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பியுள்ளனர். மேலும் எல்காட் நிறுவனத்துக்கும் முக்கியமான தகவல்களைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அடுத்தகட்டமாக 25க்கும் மேற்பட்டவர்களின் பாஸ்போர்ட்களை முடக்கம் செய்யவும் முடிவுசெய்துள்ளனர். ஊழல் தடுப்பு போலீஸார். ரெய்டு முடிந்த இரவு அன்று, ஒரு பினாமி விஜயபாஸ்கரைத் தொடர்புகொண்டபோது, 'யார்யா நீ' என்று லைனைத் துண்டித்துள்ளார்.

ரெய்டு நடந்த அன்று இரவு சென்னையில் செயதியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர்,. " இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது. என் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றவில்லை. இது தொடர்பாக விரிவாக பிறகு பேசுகிறேன்" என்று கூறினார்.

ரெய்டு நடந்த மறுநாள் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கு வந்துவிட்டார். அன்று பகல் முழுதும் அதிமுகவினர் பலரும் அவரது வீட்டை நோக்கி படையெடுத்தனர்.

விஜயபாஸ்கர் தனது வீட்டில் தந்தை சின்னத்தம்பி மற்றும் சகோதரர்களோடு தீவிர ஆலோசனை நடத்தினார்.

.அன்று மாலை ஆறு மணிக்கு இலுப்பூரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று புதுக்கோட்டை நகரில் உள்ள செய்தியாளர்களுக்கு மாலை 4.40 க்கு தகவல் தரப்பட்டது

புதுக்கோட்டை நகரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலுப்பூருக்கு செய்தியாளர்கள் விரைந்தனர். பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் போதே... செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்று அவர்களுக்கு மீண்டும் தகவல் தரப்பட்டது.

அப்போதிலிருந்து நேற்று முழுவதும் செய்தியாளர்களை சந்திக்க வில்லை விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் அவரது பினாமிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் என்கிறார்கள் தமிழக காவல்துறையினர்.

"-வணங்காமுடி*

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

வியாழன் 21 அக் 2021