60 தொகுதிகள்: ராமதாஸின் ஆட்சிக் கணக்கு!

politics

பாமகவினர் தேனீக்களை போல உழைத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் காணொலி வழியாக நடந்தது. அக்கூட்டத்தில் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து வேதனை தெரிவித்த ராமதாஸ், பாமகவினர் தேனீக்களை போல செயல்பட்டு அடுத்த ஆட்சி பாமக ஆட்சி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன் நீட்சியாக இன்று (அக்டோபர் 18) அறிக்கை வெளியிட்ட ராமதாஸ்,

“பொதுக்குழு கூட்டத்தில் நான் உரையாற்றியதைப் போல தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி நம்முடையதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வலிமையாக இருக்கிறோம். அவற்றில் 60 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் நாம் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

தேனீக்கள் 90 நாட்கள் மட்டுமே உயிர்வாழும் பூச்சிகள். ஆனால், அவை அந்த 90 நாட்களில் ஒரு நாள் கூட ஓய்வெடுப்பதில்லை. 90 நாள் வாழ்நாளில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் செய்கின்றன. பாட்டாளிகளாகிய நமக்கு கட்சியை வலுப்படுத்துவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அதன்பின் ஆட்சியைப் பிடிக்க மூன்றரை ஆண்டுகள் உள்ளன. தேனீக்களின் உழைப்பை மனதில் கொண்டு கடுமையாக உழைத்தால் நம்மால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது சாத்தியம் தான். அதனால் இன்று முதல் பாட்டாளிகள் அனைவரும் கட்சி வளர்ச்சிக்காக தேனீயாக உழைக்க வேண்டும்!

உழைப்புக்கு உதாரணம் தேனீக்கள் தான் என்று நாம் மிகவும் சாதாரணமாக கூறி விடுகிறோம். ஆனால், அவற்றின் உழைப்பு குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மிகவும் அதிகம்; அதை பாட்டாளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதை பாட்டாளிகள் மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்; புதிய உற்சாகத்துடன் தேனீக்களைப் போல உழைக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *