மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் அப்டேட்!

உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் அப்டேட்!

அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பெற்று இருக்கிறது.

நேற்று மதியமே முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் அனைத்து இடங்களுக்குமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி,

153 இடங்களுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 151 பதவிகளுக்கு திமுக 122 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களையும், மதிமுக 2, விசிக 1 இடத்தையும் பிடித்துள்ளது. அதிமுக 1 இடத்தை பிடித்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1421 பதவிகளில் 1339க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்துக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

மீதமுள்ள இடங்களில் திமுக 922 இடங்களையும், காங்கிரஸ் 33 இடங்களையும், மதிமுக -14, விசிக -17, சுயேட்சைகள் -90, பாமக -43, மமமுக -1, அமமுக - 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதுதவிர 3007 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் தற்போது வரை மொத்தம் 2870 பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 137 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

20,263 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23,211க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 3221 பேர் போட்டியின்றி தேர்வு இன்றி தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 14 அக் 2021