’சத்தியமா உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன்’!- கவுன்ட்டிங் கலாட்டாக்கள்!

politics

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்றது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(அக்டோபர் 12) காலை முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்குகளை தரம் பிரித்து அதிகாரிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒருசில இடங்களில திமுக, அதிமுக கட்சியினர் இடையே வாக்குவாதம், அதிகாரிகள் தர்ணா, வாக்குப்பெட்டி சாவி தொலைந்துபோனதால் பெட்டி பூட்டு உடைப்பு,உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதேவேளையில் வடிவேலு பட காமெடி காட்சிகளும் ஒருசில இடங்களில் அரங்கேறியுள்ளது.

குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளனர்.

அதேமாவட்டத்தில் கெஜல்நாய்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1ல் வாக்களித்த இரண்டு பேர், வேட்பாளரிடம் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிப்பதற்காக வாக்கு சீட்டை எடுத்துக் கொண்டு, பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் வடிவேலு பட காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என்பது போல், ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள அனைத்து சின்னங்களிலும் வாக்களித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாத 310 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மக்களின் கவனக்குறைவு, அலட்சியம் போன்ற காரணங்களால் இன்று பெரும்பாலான வாக்குகள் செல்லாதவையாக மாறியுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *