மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்த நிலத்தை மீட்க உத்தரவு!

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்த நிலத்தை மீட்க உத்தரவு!

குயின்ஸ் லேண்ட் தீம் பார்க் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நடத்தி வருகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து 2.75 கோடி ரூபாய் இழப்பீடாகச் செலுத்த வேண்டுமென குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் 2013ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை எதிர்த்து குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2013ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 7) நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “இந்த நிலம் 1995ஆம் ஆண்டில், முதலில் செல்வராஜ் என்பவருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோயில் பெயரிலிருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ் லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம், 1998இல் குத்தகை காலம் முடிந்த பிறகும் நிலத்தை ஒப்படைக்காமல் ஆக்கிரமித்துள்ளது” என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ் லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, நான்கு வாரங்களில் கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், அந்த நிறுவனம் வருவாய்த் துறைக்கு 1.08 கோடி ரூபாயும், கோயிலுக்கு 9.50 கோடி ரூபாயும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 8 அக் 2021