மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்கள்!

காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்கள்!

நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களின் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. அக்டோபர் 6ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் கட்சியினர் பலர், பெண்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, டீக்கடைகளில் டீ போடுவது, உணவகங்களில் பரோட்டா போடுவது, தோசை சுடுவது, தண்ணீர் அடித்துக் கொடுப்பது, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதுபோன்று, தற்போது மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் யுக்தியை கடைப்பிடித்துள்ளனர் அதிமுக வேட்பாளர்கள்.

தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுச்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக சபரிநாதன் என்பவர் போட்டியிடுகிறார். இவர், நேற்று (அக்டோபர் 7) காட்டுச்சேரி, சந்திரபாடி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பொதுமக்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட ஒன்பதாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அழகுசுந்தரி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏ-வுமான விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அழகுசுந்தரி முதியவர்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 8 அக் 2021