மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

பாஜக அரசிடம் அனுமதி வாங்கி வாருங்கள்: சேகர்பாபு

பாஜக அரசிடம் அனுமதி வாங்கி வாருங்கள்: சேகர்பாபு

கோயில்களைத் திறக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் சுற்றறிக்கை வாங்கி வரச்சொல்லி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுக்குத் தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து நேற்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள்ளாக அனைத்து நாட்களும் கோயில்களைத் திறந்துவைக்க அனுமதிக்காவிட்டால், அரசே ஸ்தம்பிக்கும் வகையில் எங்கள் வேலைகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையை இணையவழியில் செலுத்தும் வசதியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு 10 நாள் கெடு விதிப்பதாக கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, எத்தனை தடைகள் வந்தாலும், இதுபோன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது.

ஒன்றிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லால் அகர்வால், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் இருவரும் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

கொரோனா அலை என்பது முழுவதுமாக குறைந்துவிட்டது என்று யாரும் நினைக்கக் கூடாது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த தொற்று வேகமாக அதிகரிக்கலாம். எனவே அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே ஒன்றிய அரசை எதிர்த்து போராட வேண்டிய பாஜகவினர் தமிழக அரசை எதிர்த்துப் போராடுவது தான் விந்தையாக இருக்கிறது. போராட்டம் நடத்துபவர்கள், திருவிழாக்களுக்கு அனுமதி, கூட்டங்கள் சேர அனுமதிக்கலாம் என்று ஒன்றிய அரசிடம் சுற்றறிக்கை பெற்றுத் தந்தால் அதனை உடனடியாக நிறைவேற்றத் தமிழக அரசு தயாராக இருக்கிறது.

குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில், நிச்சயம் இந்து சமய அறநிலையத் துறை சட்ட போராட்டம் நடத்தி நிலத்தை மீட்கும் என்று ஏற்கனவே கூறி இருந்தது. அரசு நடத்திய சட்டபோராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையில் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

நீதிபதி வழிகாட்டுதல் படி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படும் . குயின்ஸ்லேண்ட் தரப்பில் மேல்முறையீடு சென்றாலும், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை அரசு எடுக்கும்” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 8 அக் 2021