மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்: நீதிமன்றம்!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்: நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது அதிமுகவின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக ராமகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் வீராவே ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் கைது செய்து விடக்கூடாது என ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் கொலை மிரட்டல் மட்டுமில்லாமல் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன் ஜாமீன் மனுவை ராஜேந்திர பாலாஜி தரப்பு வாபஸ் பெற்றது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தனசேகரன், முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அதுவரை இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 8 அக் 2021