மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

முதற்கட்ட தேர்தல்: அதிகபட்ச வாக்கு பதிவான மாவட்டம்!

முதற்கட்ட தேர்தல்: அதிகபட்ச வாக்கு பதிவான மாவட்டம்!

உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இறுதி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை (அக்டோபர் 9) நடைபெறுகிறது. அதற்கான இடங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ளது.

மொத்தம் 77.43% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகக் காஞ்சிபுரத்தில் 84.30%, செங்கல்பட்டில் 66.71%, வேலூரில் 77.63%, ராணிப்பேட்டையில் 80.89%, விழுப்புரத்தில் 83.66%, கள்ளக்குறிச்சியில் 82.25%, நெல்லையில் 70.81%, தென்காசியில் 73.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும், தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி சிவசைலம் கிராம ஊராட்சியில் வார்டு எண் 2 மற்றும் 3க்கென பொதுவாக அமைக்கப்பட்ட இரு வார்டு வாக்குச்சாவடி எண் 130ல், இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவி இடம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த வார்டை சேர்ந்த 45 வாக்காளர்கள் 3ஆவது வார்டு உறுப்பினர் பதவி இடத்திற்கு நடைபெற்ற தேர்தலுக்காக வாக்கு அளித்திருப்பதாகத் தென்காசி மாவட்டம் ஆட்சித் தலைவர் தெரிவித்தார். மேலும் வார்டு 3க்கு மறுதேர்தல் நடத்த அனுமதி கோரியதன் அடிப்படையில் சிவசைலம் கிராம ஊராட்சியின் 3ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

--பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வெள்ளி 8 அக் 2021