மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

பாஜக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பாஜக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார இறுதி நாட்களில் கோயில்களில் மக்கள் வழிபட அனுமதி அளிக்கக் கோரியும் நேற்று(அக்டோபர் 7) பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் முக்கிய 12 கோயில்களின் முன்பு திரண்ட பாஜகவினர் தடை உத்தரவை நீக்கக் கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”தமிழ்நாடு அரசுக்கு பத்து நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில் திறப்பது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும்” என்று அண்ணாமலை எச்சரிக்கை விட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை காளிகாம்பாள் கோயில் முன்பு போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்துதல் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோன்று கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 8 அக் 2021