மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

சர்க்கார் பாணியில் வாக்கு கேட்டு போராடிய பெண்!

சர்க்கார் பாணியில் வாக்கு கேட்டு போராடிய பெண்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை வேறொரு நபர் செலுத்திவிட்டதால் சர்க்கார் பட பாணியில் டெண்டர் வாக்களிக்க அனுமதி கேட்டு பெண் போராட்டம் நடத்தியுள்ளார்.

நேற்று (அக்டோபர் 6) நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 444 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 60 ஊராட்சி மன்றத் தலைவர், 25 ஒன்றிய கவுன்சிலர், மூன்று மாவட்ட கவுன்சிலர் என மொத்தமாக உள்ள 532 காலி பதவியிடங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 83 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மீதமுள்ள 449 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

ரிஷிவந்தியம் ஒன்றியம், வாணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவர் மும்பையில் வசித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊரான வாணாபுரத்துக்கு வந்த இவர், பகண்டை கூட்டு ரோடு அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் நேற்று மாலை தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தார்.

அப்பெண் வாக்களிக்க செல்லும்போது, உங்களது வாக்கு காலையிலேயே செலுத்தப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தோணியம்மாள், நான் இருக்கும்போது, எனது வாக்கை எப்படி மற்றொருவர் எப்படி செலுத்த முடியும் என்று அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார்.

மேலும், தான் வாக்களிக்க வேண்டும். அதனால் டெண்டர் முறையில் வாக்கு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பெண் கூறினார்.

இதையடுத்து டெண்டர் முறையில் வாக்கு அளிப்பதற்கான படிவம் கொடுக்கப்பட்டு அவருடைய அடையாள அட்டையை வாக்காளர் பதிவேட்டில் ஒப்பிட்டுப் பார்த்தபோது வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த எண்ணும் வாக்காளர் பதிவேட்டில் இருந்த எண்ணும் வெவ்வேறாக இருந்ததால் வாக்குச்சாவடி அலுவலர் வாக்கு சீட்டு தர மறுத்துவிட்டார்.

இந்த வாக்காளர் அடையாள அட்டையை வைத்துதான் நான் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். அதனால், எனக்கு வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றுக் கூறி வாக்குச் சாவடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பகண்டை கூட்டு ரோடு சப் இன்ஸ்பெக்டர் சோலை, அந்தோணியம்மாளிடம் பேசி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முறையிடுமாறு கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் வாக்குப் பெட்டியை சீல் வைக்கும் பணி தாமதமானது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கின்ற நேரமெல்லாம், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வழக்கமாக நடக்கிற பிரச்சினைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 7 அக் 2021