மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

கொரோனா குறைந்த பிறகே கோயில் திறப்பு : சேகர்பாபு

கொரோனா குறைந்த பிறகே கோயில் திறப்பு : சேகர்பாபு

கண்மூடித்தனமாக ஏதேதோ காரணங்களை உருவாக்கி போராட்டம் நடத்துகிறார்கள் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கக் கோரி தமிழ்நாட்டில் முக்கிய 12 கோயில்களின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களை திறக்க திமுக அரசு மறுக்கிறது. அவர்களுடைய சித்தாந்தத்தை புகுத்தவே இந்த தடை” என்று குற்றம்சாட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், பாஜக நடத்தும் போராட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,”அரசியல் களத்தில், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கும். அந்தவகையில் போராடுவதற்கு வலுவான காரணங்கள் இல்லாததால், இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்குகிறார்கள்.

இந்து அறநிலையத் துறையை பொறுத்தவரையில், ஒன்றிய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படிதான் தளர்வுகளை அளித்து வருகிறோம். அதிகமான கூட்டம் கூடுகின்ற நிலையை தவிர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், அன்று கோயில்களில் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால், வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் கோயில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தாராளமாக மக்கள் கோயில்களுக்கு செல்லலாம்.

அதனால், கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கியவுடன்,நிச்சயமாக கோயில்களை திறக்க முதல்வர் அனுமதி அளிப்பார் என்று உறுதியை அளிக்கிறேன்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,” பாஜகவின் போராட்டத்தை உற்று கவனித்தால் தெரியும். கோயில்களை திறக்க தடை விதித்து இருக்கும் மூன்று நாட்களில் ஏதாவது ஒருநாள் போராட்டத்தை வைத்திருக்கலாம். ஆனால், கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள இன்று போராட்டத்தை வைத்துள்ளார்கள். இந்த போராட்டத்தால் மக்கள் கோயிலுக்கு செல்வது மூன்று நாட்களாக குறைந்துள்ளது. இவர்களால் ஒருநாள் தடைபட்டு விட்டது. அதனால் போராடுபவர்கள் கண்மூடித்தனமாக ஏதேதோ காரணங்களை உருவாக்கிக் கொண்டு அதற்காக போராடுகிறார்களே தவிர,வேறு ஒன்றும் இல்லை.

கொரோனா தொற்று காலத்தில் எந்தவித உயிர் இழப்பும் ஏற்படக் கூடாது என்பதை அவர்களும் தெரிந்திருக்க வேண்டும்; புரிந்திருக்க வேண்டும். அதனால், கொரோனா குறைந்தவுடன் இதுகுறித்து முதல்வர் உரிய முடிவெடுப்பார்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 7 அக் 2021