மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

பொது இடங்களில் சிலைகள்: 3 மாதங்களில் அகற்ற உத்தரவு!

பொது இடங்களில் சிலைகள்: 3 மாதங்களில்  அகற்ற உத்தரவு!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்றத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கோனூர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அவ்விடத்தில் அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டதாக அதனை அகற்ற வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 7) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிலை அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அரசு நிலங்கள், பொது சாலைகள் , ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் சிலைகளை அமைப்பது தொடர்பாக அரசு விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 7 அக் 2021