மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

ஆர்யன் கானின் கைது போலியானது: அமைச்சர்!

ஆர்யன் கானின் கைது போலியானது: அமைச்சர்!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இதில் ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகிய மூன்று பேரிடம் இருந்து 13 கிராம் கோகைன், 5 கிராம் எம்.டி, 21 கிராம் கஞ்சா, 22 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 33,000 பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஒருநாள் காவல் முடிந்து மூன்று பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் (என்.சி.பி) மும்பை மெட்ரோபாலிட்டன் கூடுதல் மாஜிஸ்திரேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மாஜிஸ்திரேட்டு ஆர்.எம்.நெலிகர் மூன்று பேரையும் அக்டோபர் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பிக்கு அனுமதி வழங்கினார்.

இது தொடர்பான விசாரணையின்போது, ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேருக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக என்.சி.பி தெரிவித்தது.

இந்த நிலையில் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஆர்யன் கானின் கைது போலியானது. கடந்த ஒரு மாதமாக இந்தத் தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது. அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக் கான் தான்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதை மறைக்கவே ஷாருக் கான் மகன் கைது செய்யப்பட்டதாக விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

-அம்பலவாணன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வியாழன் 7 அக் 2021