மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதவிக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமார் 1.10 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 7,921 வாக்குச்சாவடிகளில் 41,500 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

இதில் காலை 9 மணி நிலவரப்படி 7.72 சதவிகித வாக்குகளும், 11 நிலவரப்படி 19.61 சதவிகித வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 33.78 சதவிகித வாக்குகளும், மதியம் 3 மணி நிலவரப்படி 52.40 சதவிகித வாக்குகளும் பதிவாகின.

3 மணி நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 58.27%, செங்கல்பட்டில் 47.30%, கள்ளக்குறிச்சியில் 53.27%, விழுப்புரத்தில் 61.04%, நெல்லையில் 52.01%, தென்காசியில் 55.29%, திருப்பத்தூரில் 41.24%, வேலூரில் 52.32%, ராணிப்பேட்டையில்- 49.70 % வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது

இந்நிலையில் மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவு பெற்றது. சில வாக்குச்சாவடிகளில் இறுதி நேரத்தில் வாக்காளர்கள் திரண்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகின்றன.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 6 அக் 2021