மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

தொடர் போராட்டம்: பிரியங்காவுடன் லெகிம்பூர் செல்லும் ராகுல்

தொடர் போராட்டம்: பிரியங்காவுடன்  லெகிம்பூர் செல்லும் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேச தலைநகர் லக்னோ விமான நிலையத்தில் போராட்டம் நடத்திய பிறகு லெகிம்பூர் பகுதிக்குப் புறப்பட்டார்.

இன்று (அக்டோபர் 6) காலை டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிறகு விமானம் மூலம் உத்திரப்பிரதேசம் புறப்பட்டார் ராகுல் காந்தி. அம்மாநிலத்தில் லெகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷுடைய கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கே செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லெகிம்பூர் செல்லும் வழியில் சீதாபூரில் உபி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டுள்ளார். போலீஸார் ஒருவரை பிடித்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி,கடந்த மூன்று நாட்களாக பிரியங்கா காந்தியை பகிரங்கமாக சட்ட விரோத காவலில் வைத்திருந்தது உபி போலீஸ்.

ராகுல் காந்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் லக்னோ விமான நிலையம் வந்தார். அவரோடு சத்தீஷ்கர், பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர்களும் வந்தனர். விமான நிலையத்தில் இறங்கிய ராகுலிடம் உபி போலீஸார்., “நீங்கள் உங்கள் வாகனங்களில் அங்கே செல்ல முடியாது. எங்களது போலீஸ் வாகனத்தில்தான் செல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தனர்.

இரு வெளிமாநில முதல்வர்கள் வந்திருக்கிறார்கள். நான் ஒரு எம்பி. எங்கள் வாகனத்தில் எங்களை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாக கேட்ட ராகுல் காந்தி, விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு போலீசார் தங்களது நிபந்தனையை திரும்பப் பெற்றுக் கொண்டு சொந்த வாகனங்களில் ராகுல் காந்தி செல்ல அனுமதித்தனர்.

அதன் பின் லக்னோவில் இருந்து புறப்பட்ட ராகுல் காந்தி , சீதாபூருக்கு மாலை 5.30 மணியளவில் சென்றார். அங்கே தடைக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியை சந்தித்து அவருடன் சேர்ந்து லெகிம்பூர் கெரி பகுதிக்குச் சென்று கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க இருக்கிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் சுமார் அறுபது மணி நேரமாக சட்ட விரோத காவலில் வைக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸார் இந்தியா முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 6 அக் 2021