மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

உயிர் பயத்தால் தேர்தலைப் புறக்கணித்த பட்டியல் சமூகம்!

உயிர் பயத்தால் தேர்தலைப் புறக்கணித்த பட்டியல் சமூகம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று (அக்டோபர் 6) வாக்குப் பதிவு நடைபெற்ற வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி மக்கள் அனைவரும் தேர்தலைப் புறக்கணித்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்தில் சுமார் 2400 வாக்காளர்களை கொண்ட அம்முண்டி ஊராட்சியில் இன்று தேர்தலை புறக்கணித்துள்ளார்கள். புறக்கணிப்புக்குக் காரணம் என்ன?

“ எங்கள் ஊரில் பெரும்பான்மையாக வன்னியர்களும் ரெட்டியார்களும் இருக்கிறார்கள். ஆனால், ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் அதிகாரிகளிடம் மாற்றச் சொல்லுங்கள் என்றோம். அவர்கள் தேர்தல் ஆணையம் சட்டப்படி சுழற்சி முறையில் அறிவித்துள்ளது. ,அதனால், பட்டியல் சமூகத்தினர்தான் போட்டியிடவேண்டும் என்றார்கள்.

நாங்களும் பட்டியல் சமூகத்திலிருந்து யாராவது போட்டியிட்டால் தேர்தலை நடத்துங்கள் என்று சொல்லிவிட்டோம். அவர்கள் யாரும் போட்டியிடவில்லை” என்றார்கள் வன்னியர் சமூகத்தினர்.

நாம் இதுகுறித்து பட்டியல் சமூக மக்களிடம் பேசினோம். “வன்னியர்கள் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். மற்ற சமூகத்தினரும் இருக்கிறார்கள். நாங்கள் குறைவான குடும்பத்தினர்கள் வசிக்கிறோம். மேலும் அவர்களைச் சார்ந்து வாழ்கிறோம். அவர்களை மீறி பதவிக்கு ஆசைப்பட்டு போட்டியிட்டால் எங்களுக்கு உயிர் இழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படும் என்பதால் அமைதியை விரும்பி மௌனம் காத்து வருகிறோம்” என்கிறார்கள்.

“சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் தேர்தல் ஆணையத்திற்கு, இப்படிப்பட்ட எதார்த்த நிலை தெரியவில்லை. வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகளும் சாதி ஓட்டுகளுக்குப் பயந்து ஒதுங்கி நிற்கிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார் வேலூர் இளம் வழக்கறிஞர் ஒருவர்.

-வணங்காமுடி

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 6 அக் 2021