மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

நீட் கடிதம்: கேரள முதல்வரிடம் வழங்கிய டி.கே.எஸ் இளங்கோவன்

நீட் கடிதம்: கேரள முதல்வரிடம் வழங்கிய  டி.கே.எஸ் இளங்கோவன்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக முதல்வர் எழுதிய கடிதம் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் இன்று வழங்கப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக ஆராயத் தமிழக அரசு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் படி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது, தமிழக அரசின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை எனில் அனைத்து மாநிலங்களின் ஆதரவையும் திரட்டி நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அக்டோபர் 4 ஆம் தேதி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை இணைத்து கடிதம் ஒன்றை எழுதினார்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி இப்பிரச்சினை குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவை கோரவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி இன்று, திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தலைமையிலான குழு கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து முதல்வரின் கடிதத்தை வழங்கியது. இந்த சந்திப்பு திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது கடிதத்தை முழுமையாகப் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்று கேரள முதல்வர் உறுதி அளித்ததாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று வாழ்த்து தெரிவித்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 6 அக் 2021