மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொடர்பான பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிஎல்பி (productivity-linked bonus) எனப்படும் உற்பத்தித் திறன் அடிப்படையிலான போனஸ் என்பது ஒவ்வொரு ஆண்டும் தசரா அல்லது தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு முன்பாக ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், 2020-21 நிதியாண்டுக்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸை தகுதியுடைய ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கான செலவு ரூ 1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழில் இல்லாத தகுதியுடைய பணியாளர்களுக்கு போனஸை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ. 7000 ஆகும்.

இதன்மூலம் சுமார் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். ரயில்வேயின் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ், நாடு முழுவதும் ஆர்பிஎஃப்/ஆர்பிஎஸ்எஃப் பணியாளர்களைத் தவிர அனைவருக்கும் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 6 அக் 2021