மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

நாட்டில் சர்வாதிகாரம்: லெக்கிம்பூர் புறப்பட்ட ராகுல்

நாட்டில் சர்வாதிகாரம்: லெக்கிம்பூர் புறப்பட்ட ராகுல்

உத்தரபிரதேச மாநிலம் லெக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் புறப்பட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பிரியங்கா காந்தியை போல ராகுல் காந்தியும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று (அக்டோபர் 6) காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது,"இந்தியாவில் முன்பு ஜனநாயகம் இருந்தது, இப்போது இந்தியாவில் சர்வாதிகாரம்தான் உள்ளது. அரசியல்வாதிகள் உத்தரபிரதேசத்திற்கு செல்ல முடியவில்லை. நாங்கள் உத்தரபிரதேசத்திற்கு செல்ல முடியாது என்று நேற்று முதல் சொல்லப்பட்டு வருகிறது.

நானும் காங்கிரஸ் முதல்வர்களான சத்தீஷ்கர் பூபேஷ் பாகல் , பஞ்சாப் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லெக்கிம்பூர் கெரிக்கு செல்ல முடிவு செய்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர் உலா வந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் விவசாயிகள் மட்டும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி உத்திரப்பிரதேசம் செல்கிறார். ஆனால் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை அவர் சந்திக்கவில்லை. இதில் இருந்தே இந்த ஆட்சியில் நாட்டிலுள்ள விவசாயிகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள், திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்பது புரிகிறது.

நில கையகப்படுத்தும் சட்டம், அதன் பின் மூன்று வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்”என்று கூறிய ராகுல் காந்தி,, உபியில் பிரியங்கா காந்தி போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு, “ஆம். பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார், ஆனால் இந்த செய்தியாளர் சந்திப்பு விவசாயிகளைப் பற்றியது. உத்திரப்பிரதேசத்தில் புது சட்டம் இருக்கிறது. குற்றவாளிகள் எல்லாம் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நியாயம் கேட்பவர்கள் நீதி கேட்பவர்கள் எல்லாம் சிறையிலும் தடுப்புக் காவலிலும் இருக்கிறார்கள்" என்றார்.

“ஊடகங்களான நீங்கள்தான் இந்த விவகாரம் குறித்து உரக்கப் பேச வேண்டும். ஆனால் நாங்கள் பேசும் போது இதில் அரசியல் செய்வதாக சொல்கிறீர்கள்” என்று ஊடகங்களையும் ஒரு பிடி பிடித்தார் ராகுல் காந்தி.

இந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து உபி செல்வதற்காக சத்தீஷ்கர், பஞ்சாப் முதல்வர்களோடு ராகுல் காந்தி டெல்லி விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து லக்னோ செல்வதற்கான விமானத்தில் ராகுல் காந்தி, பூபேஷ் பாகல், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் புறப்பட்டார்கள். லக்னோ விமான நிலையத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இதையடுத்து ஏற்பட்டுள்ளது.

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 6 அக் 2021