மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

லக்கிம்பூர் பகுதியில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் கார் ஒன்று நுழைந்தது. இதனால் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய இணை அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில்தான் இந்த நிகழ்வு நடந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 151 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், “பிரியங்கா காந்தி கடந்த 4ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சூரிய உதயத்துக்கு முன்பு எந்த பெண்ணையும் கைது செய்யக் கூடாது. அதுமட்டுமின்றி ஒரு ஆண் போலீஸ் அதிகாரியின் மூலம் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பது சட்ட விரோதமானதாகும்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 151ஆவது பிரிவின் கீழ் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்தப் பிரிவின் கீழ் கைதானவர்களை மாஜிஸ்திரேட் உத்தரவு இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்கக் கூடாது. பிரியங்கா காந்தி 30 மணி நேரத்துக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் சட்டவிரோதமானது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சட்டம், அவரது உத்தரவு என்று ஆகிவிட்டது. அந்தச் சட்டத்தையும் உத்தரவையும் போலீஸார் நிறைவேற்றியது போல் தோன்றுகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

ராகுல் காந்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் லக்கிம்பூர் செல்ல இருப்பதாகவும், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரப்பிரதேச முதல்வருக்குக் கடிதம் எழுதினார்.

லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்க உத்தரப் பிரதேச அரசு மறுப்புத் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் யாதவ் ஆகியோரையும் உ.பி அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 6 அக் 2021