மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

ஸ்டாலினுக்கு சலாம் போட்ட குலாம்: பின்னணி என்ன?

ஸ்டாலினுக்கு சலாம் போட்ட குலாம்: பின்னணி என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் அக்டோபர் 3 சென்னையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தோடு சந்தித்தார்.

மேலும், திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் தனது நண்பருமான கனிமொழி எம்.பி வீட்டுக்கும் சென்ற குலாம் நபி ஆசாத் அங்கே ராசாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்தார். ‌‌‌‌‌

முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், “இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அவரது தந்தை கருணாநிதியைப் போலவே இவரும் தீவிரமான உழைப்பாளி. ஒரு நாளில் 19 மணி நேரத்துக்கு மேல் உழைக்கிறார் ஸ்டாலின்” என்று திமுக தலைவரான முதல்வரைப் புகழ்ந்து தள்ளினார் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸில் அகில இந்திய அளவில் சோனியா காந்தியின் தலைமையை எதிர்க்கும் சீனியர்கள் 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இந்த நிலையில் சென்னை வந்த குலாம் நபி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின்னணி பற்றி திமுக, காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.

“குலாம்நபி ஆசாத் சென்னையில் இருக்கும் தனது நண்பரான ஹோட்டல் அதிபர் அபுபக்கரின் இல்ல திருமண விழாவுக்காக அக்டோபர் 2ஆம் தேதி சென்னை வந்தார். குலாம் நபியின் அதிகார காலங்களில் அபுபக்கர் அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவராக இருந்தவர். அவரது வீட்டு விசேஷத்துக்காக வந்த குலாம், அன்று இரவு சென்னையில் தங்கினார். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவரை நேரில் சந்திக்காததால் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினார். கனிமொழி மூலம் அப்பாயின்ட்மென்ட் கேட்டுப் பெற்றார் குலாம்.

குலாம் நபி ஆசாத் மறைந்த தமிழக முதல்வர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி எண்ணிக்கை பற்றி இழுபறி நிலவும்போதெல்லாம் குலாம் கோபாலபுரத்துக்கு வந்து கலைஞரிடம் பேசி சீட் விஷயங்களை இறுதி செய்து விடுவார். அந்த நினைவுகளை இந்தச் சந்திப்பின்போது ஸ்டாலினிடம் பகிர்ந்துகொண்ட குலாம் நபி ஆசாத், அடுத்து தமிழகத்திலிருந்து வரும் மாநிலங்களவை இடங்களுக்கான வாய்ப்பைத் தனக்கு வழங்குமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாகவும்

தகவல்கள் கசிகின்றன.

ராஜ்ய உறுப்பினராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதத்தோடு முடிந்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தனக்கு ராஜ்ய சபா வாய்ப்பு பற்றி திமுகவிடம் கோரிக்கை வைக்க இந்த சென்னை பயணத்தை குலாம் பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்கள்.

ஆனால், குலாம் இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தாலும் அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் தேசிய அளவில் சோனியா காந்திக்கு எதிரான சீனியர்களின் குழுவில் குலாம் நபி ஆசாத் இடம்பெற்றிருப்பதால் அவரை ராஜ்ய சபா எம்.பி.யாக காங்கிரஸ் தலைமை தற்போது தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதை முறியடித்து கலைஞர் குடும்பத்திடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜ்ய சபா வாய்ப்பைப் பெறுவதற்கு குலாம் தீவிரமாக முயற்சி செய்கிறார் என்று தெரிகிறது.

மேலும், தலைமையின் குறிப்பை உணர்ந்ததால்தான் தமிழக காங்கிரஸ் புள்ளிகள் குலாமை சந்திக்க விருப்பம் காட்டவில்லை” என்கிறார்கள் திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 5 அக் 2021