மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

பிரியங்காவைச் சந்திக்க மறுப்பு: முதல்வர் தர்ணா!

பிரியங்காவைச் சந்திக்க மறுப்பு: முதல்வர் தர்ணா!

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சந்திக்கச் சென்ற சத்தீஸ்கர் முதல்வர் பூகேஷ் பாகல் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர் விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில், விவசாயிகள் போராட்டக் கூட்டத்துக்குள் கார் நுழைந்ததாலும், அதனால் ஏற்பட்ட வன்முறையாலும் 9 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க வந்த பிரியங்கா காந்தி சிதாபூர் அருகே நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது வரை அவர் தடுப்பு காவலில் உள்ளார். எப்.ஐ.ஆர் பதியாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அவர் மீது சிஆர்பிசி 151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரியங்கா காந்தியைச் சந்தித்த உத்தரப் பிரதேசம் செல்ல இருப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்தார். இந்நிலையில், பூபேஷ் பாகலின் விமானம் லக்னோவில் தரையிறங்க உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்தது.

எனினும், உபி அரசின் உத்தரவை மீறி அவர் இன்று லக்னோ விமான நிலையத்துக்கு வந்தார், அப்போது அவரை போலீசார் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். பிரியங்கா காந்தியைச் சந்திக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர், விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்தவித உத்தரவுமின்றி, விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை. அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு லக்கிம்பூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அங்குச் செல்லவில்லை. சீதாபூர் செல்கிறேன். அங்கு செல்வதில் என்ன பிரச்சனை உள்ளது என்று போலீசாரிடம் அவர் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு லக்னோவிலும் பெரும் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "இந்த சம்பவத்தில் ஒன்றிய அமைச்சரின் மகனைக் கைது செய்யாமலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுவிக்காமலும் இருந்தால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கீம்பூரை நோக்கி பேரணியில் ஈடுபடும்" என குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 5 அக் 2021