மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

கிராமத்துக்கு இலவச டிராக்டர்! உள்ளாட்சியில் மெகா வாக்குறுதி!

கிராமத்துக்கு  இலவச டிராக்டர்!  உள்ளாட்சியில் மெகா வாக்குறுதி!

கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் நிற்பதும் அவர்கள் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் அதே கட்சியில் சேர்வதும் உள்ளாட்சித் தேர்தலில் சகஜம்தான். இந்த சகஜம் கட்சிக்குள் சலசலப்புகளையும் கிளப்பும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, திண்டிவனம், மயிலம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் மஸ்தான் செயல்பட்டு வருகிறார். திண்டிவனம் தொகுதியில் உள்ள ஒலக்கூர் ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சொக்கலிங்கம்.

வேட்பாளர் விஷயத்தில் மாசெவுக்கும் ஒ.செ.வுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் திமுகவினர்.

“ஒலக்கூர் ஒன்றியத்தில் ஈச்சேரி ஊராட்சியில் பண பலம் உள்ள பாமக நிர்வாகி இ.என்.சேகர் இரண்டு மாதம் முன்பு, அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது கட்சி நிதியும் கொடுத்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட அமைச்சர் மஸ்தானிடம் சீட் கேட்டார் சேகர். அமைச்சரும் கொடுக்க முன்வந்தபோது ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், கட்சியில் நீண்ட நாட்களாக இருந்துவரும் தனக்கு வேண்டியப்பட்டவருக்கு வேண்டும் என்று சொல்லி அவருக்கே கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியான சேகர் நேராக அமைச்சரிடம் சென்று முறையிட, ‘யப்பா இது உள்ளாட்சித் தேர்தல். லோக்கல் கட்சிக்காரங்களையும் அனுசரிக்கணும். உன்னிடம்தான் செல்வாக்கு உள்ளதே... நீயே சுயேச்சையாக நின்னும் முடிஞ்சா ஜெயிச்சு வா...அப்புறம் பாத்துக்கலாம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து அமைச்சரின் ஆசி தனக்கே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஈச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இ.என். சேகர் போட்டியிடுகிறார், ஒலக்கூர் 10வது வார்டு ஒன்றிய கவன்சிலர் பதவிக்கு அவரது அண்ணி பூங்கொடி எல்லப்பனை சுயேச்சையாக நிறுத்தியுள்ளார். திமுக வேட்பாளராக ரேகா முத்துகிருஷ்ணன், அதிமுக வேட்பாளராக இந்திரா பன்னீர் போட்டியிடுகிறார்கள்.

7வது வார்டு ஒன்றிய கவன்சிலர் பதவிக்குத் தனது தம்பி எழிலரசனை சுயேச்சையாக நிறுத்தியுள்ளார், அதே வார்டில் திமுக வேட்பாளர் முத்துவேல், அதிமுக வேட்பாளராக தனசேகர், பாமக வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

7 மற்றும் 10வது ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அண்ணியையும் தம்பியையும் வெற்றிபெற வைக்கவும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குத் தன்னையும் வெற்றிபெற வைக்க... வாக்காளர் குடும்பங்களுக்கு தலா ஒரு மூட்டை அரிசி, மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்து வருகிறார் சேகர். அதுமட்டுமல்ல.... டிராக்டர் ஒன்று வாங்கிவிட்டு விவசாயிகள் தேவைக்கு டிராக்டர் பயன்படுத்திக்கொள்ளலாம் வாடகை தேவையில்லை என்றும் வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். இது திமுக வேட்பாளர் வெற்றியைப் பாதிக்கும்” என்கிறார்கள் ஒலக்கூர் ஒன்றிய உடன் பிறப்புகள்.

-வணங்காமுடி

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 5 அக் 2021