மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

எஃப்ஐஆர் இல்லாமல் காவல்: பிரியங்கா காந்தி கேள்வி!

எஃப்ஐஆர் இல்லாமல் காவல்: பிரியங்கா காந்தி கேள்வி!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். உபி, லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் கார் மோதி 9 பேர் வரை உயிரிழந்து, விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ள இந்த சூழலில் இந்நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இதற்காக பிரதமர் மோடி லக்னோ வந்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசும் பிரியங்கா காந்தி, விவசாயிகளின் பின்புறத்தில் வரும் கார், அவர்கள் மீது மோதுவதும், அப்போது விவசாயிகள் தூக்கி வீசப்படுவதும், சிதறி ஓடிவதும் பதிவான வீடியோ காட்சியைக் காண்பிக்கிறார்.

வீடியோவில் பேசும் அவர், மோடி ஜி நமஸ்காரம்... இதைப் பார்த்தீர்களா?, விவசாயிகள் மீது காரை ஏற்றியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க லக்கிம்பூர் கேரிக்குச் செல்ல விரும்பும் எங்களைப் போன்ற தலைவர்கள் எஃப்ஐஆர் இல்லாமல் 28 மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் விவசாயிகள் மீது காரை ஏற்றியவர்கள் சுதந்திரமாகச் சுற்றுவது ஏன்?. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்காதது ஏன்?.

இன்று நடைபெறும் விழாவில் நீங்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்... விவசாயிகளால் தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளவும்... விவசாயிகளின் மகன்கள் தான் எல்லைகளைப் பாதுகாக்கிறார்கள். டெல்லி எல்லையில் பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை நீங்கள் புறக்கணித்து வருகிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 5 அக் 2021