மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

இரவில் 6 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப், ஃபேஸ்புக்!

இரவில் 6 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப், ஃபேஸ்புக்!

நேற்று இரவு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது.

தற்போதைய டிஜிட்டல் உலகில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் பொழுது போக்குக்கு மட்டுமின்றி, அலுவலகப் பயன்பாடு , உடனடி தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல முக்கியமான தேவைகளுக்கும் பயன்படுகின்றன. இது போன்ற சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 9.15 மணி அளவில் திடீரென வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்கள் முடங்கின.

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இதன் சேவைகள் இயங்காததால் இதன் பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பயனாளிகள் முதலில் தங்களது இணையச் சேவையில் தான் பிரச்சனை என்று கருதினர். பின்னரே சமூக வலைதள சேவைகள் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது என்பதை அறிந்தனர்.

இதுகுறித்து ஃபேஸ்புக், "விரைவில் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும்... சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்திருந்தது.

அதுபோன்று வாட்ஸ்அப், "வாட்ஸ் அப்பில் பயனாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த சேவையை திரும்ப பெற பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தது.

இந்த நிலையில் ஆறு மணி நேரத்திற்கும் மேல் முடங்கியிருந்த சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் இயங்க தொடங்கின.

இதுகுறித்து அதிகாலை 4.40 மணிக்கு வாட்ஸ் அப் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறோம். மெதுவாக மற்றும் கவனமாக மீண்டும் இதன் சேவையைத் தொடங்கியுள்ளோம். பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக பேஸ்புக், வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 5 அக் 2021