மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அமைச்சர் நாசர்

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அமைச்சர் நாசர்

பணி நியமன விவகாரங்களில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தின் போது, அதிலும் குறிப்பாகக் கடைசி மூன்று ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் அதிக முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது ஆவின் நிர்வாகத்தில் நிர்வாகக் காரணங்களுக்கு பணியிட மாறுதல் நடைபெற இருப்பதாகவும், இதில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

ஆவின் பால், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின்) மற்றும் பால்வளத் துறையின் செயல்பாடுகளைத் துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாகக் காரணங்களுக்காகப் பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகிறது.

எனவே ஆவின், பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 4 அக் 2021