மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

புலியை பிடிக்க வலம்வரும் கும்கி யானைகள்!

புலியை பிடிக்க வலம்வரும் கும்கி யானைகள்!

டி23 புலி பிடிபடுமா? பிடிபடாதா? என்பதுதான் தற்போது தமிழகம் மட்டுமின்றி தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் கடந்த 10 நாட்களாகக் கண்ணில் தென்படாமல் வனத்துறையினருக்கு பெரும் சவாலைக் கொடுத்து வருகிறது டி 23 புலி.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் சுற்றி வரும் இந்த புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. இதனால் அதனை வேட்டையாடி பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதன் காரணமாக 10 நாட்களாகக் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினர் டி23 புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறு கால்நடை மருத்துவ குழுவினர் புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் ராணுவத்தினர் குவிந்திருப்பது போன்று, மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி மேற்கொண்ட எலைட் குழுவினரும் புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

10ஆவது நாளாகத் தொடர்ந்து இன்றும் புலியைத் தேடும் பணி நடைபெற்றது. இன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பி புலி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதுபோன்று முதுமலையிலிருந்து ஸ்ரீனிவாசன் மற்றும் உதயன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுத் தேடுதல் பணி நடைபெற்றது. புலி பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் சிங்கார வனப்பகுதி, அடர் புதர்களைக் கொண்ட வனப் பகுதியாகும். எனவே புலி கண்ணில் தென்பட்டால் அதன் மீது மயக்க ஊசி செலுத்த வன கால்நடை மருத்துவர்கள் யானைகள் மீது ஏறி காட்டுக்குள் சென்றனர். ஆனால் 10ஆவது நாளான இன்றும் புலி சிக்கவில்லை.

இந்நிலையில் புலியை வேட்டையாடப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக நொய்டாவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர், சங்கீதா டோக்ரி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 4 அக் 2021