மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

மினி இந்தியாவில் வெற்றி: பிரதமர் வேட்பாளராகும் மம்தா

மினி இந்தியாவில் வெற்றி:  பிரதமர் வேட்பாளராகும் மம்தா

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் உட்பட செப்டம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற மூன்று சட்டசபை தொகுதிகளையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை பவானிபூரில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதேபோல சம்சர்கஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம், ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகிர் உசைன் ஆகிய திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் பொதுத்தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் மரணம் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி 85,263 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாலர் பிரியங்கா திப்ரேவால் 26,428 வாக்குகளே பெற்றார். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீஜீப் பிஸ்வாஸ் 4,226 வாக்குகள் பெற்று தனது டெபாசிட்டை இழந்தார். காங்கிரஸ் இங்கே வேட்பாளரை நிறுத்தவில்லை.

மேற்கு வங்காள போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் இந்த வெற்றி பற்றி கூறும்போது, “பபானிபூர் தொகுதி மினி இந்தியா போன்றது. . பவானிபூரில் மம்தா பானர்ஜியின் இந்த சாதனை வெற்றி, இந்திய மக்கள் மோடிக்கு எதிரான கூட்டணியின் முகமாக மம்தாவை பார்க்க விரும்புவதைக் காட்டுகிறது” என்று கூறினார். மேலும் வெளிப்படையாகவே காங்கிரஸைத் தாக்கிய ஹக்கீம்,

“பாஜக தோல்வியடைந்தால் யார் பிரதமர் என்பது பற்றி காங்கிரஸ் கட்சிக்கு யோசனை இருக்கலாம். ஆனால் மக்கள் ஏற்கனவே மம்தாவை மோடியின் முக்கிய போட்டியாளராக ஏற்றுக்கொண்டனர். மம்தாவின் இந்த வெற்றியை மேற்கு வங்காளம் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்”என்று கூறியிருக்கிறார்.

இந்த வெற்றி பற்றி கூறிய மம்தா பானர்ஜி, “ பவானிபூரில் 46 சதவிகித வாக்காளர்கள் வங்காளிகள் அல்லாதவர்கள். தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் நான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளேன். பவானிபூர் மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறிய தொகுதி" என்று தெரிவித்தார்.

ஆனால், பாஜகவின் மாநில தலைவர் சுகந்த மஜும்தார், “​பவானிபூர் தேர்தலில் 57 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்ததால், இந்த முடிவு வாக்காளர்களின் மனநிலையை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பது சந்தேகம்தான்” என்றார்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 3 அக் 2021