மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

காவல்துறையில் புதிய பதவி: ஸ்டாலின் திட்டம்!

காவல்துறையில் புதிய பதவி: ஸ்டாலின் திட்டம்!

தமிழகக் காவல்துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வுபெறும் வரையில் கான்ஸ்டபிளாகவே சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அந்நிலையை மாற்றி, சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி கொடுத்துக் கௌரவப்படுத்தினார் முன்னாள் முதல்வர் கலைஞர். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இன்னொரு படி மேலே ஏறியிருக்கிறார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

அந்த இன்னொரு படி என்னவென்று காவல்துறை வட்டாரத்தில் பேசினோம்.

“காவல் துறையில் கூம்புபோன்ற தொப்பியும் அரைக்கால் டவுசரும் சீருடையாக இருந்ததை மாற்றி முழு பேண்ட் அழகான தொப்பிகள் வழங்கி அழகு பார்த்தவர் கலைஞர் . எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் போலீஸில் சேர்ந்து 35 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரையில் ஏட்டய்யாவாகவே இருந்து பணியிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்றார்கள்.

2006- 2011 திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர், கான்ஸ்டபிளாக சேர்ந்த 15 வருடத்தில் தலைமைக் காவலர் பதவியும் 25 வருடத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவியும் வழங்கி ஊதியத்தையும் உயர்த்தி கௌரவப்படுத்தினார்.

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியை அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் காவல் துறையினருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைச் சட்டமன்றத்திலும் அறிவித்தார்.

பணிக் காலம் 58 வயதாக இருந்ததை 60 வயதாக உயர்த்தியதால் பல போலீஸார்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதை அறிந்த முதல்வர், போலீஸார்களை குஷிப்படுத்தும் வகையில் 35 வருடம் பணி செய்தவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி கொடுக்க உயர் அதிகாரிகளிடம் ஆலோசனைகள் செய்துவருகிறார். .

அக்டோபர் 2022 வரையில் 35 வருடம் பணிக் காலம் முழுமை செய்கிறவர்களின் பட்டியலை எடுத்து அனுப்புமாறு மாவட்ட எஸ்.பி,கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு பத்து நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படியே எஸ்.பி.க்களும், மாநகர காவல் ஆணையர்களும் இந்த பட்டியலை எடுத்து அனுப்பி வருகிறார்கள்.

35 வருட சர்வீசில் ஒரு மாவட்டத்திற்கு சுமார் 60 பேர் குறையாமல் இருக்கிறார்கள். இந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 2000 போலீஸார் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கலாம் என்றும், இல்லை என்றால் அதற்கு ஏற்றதுபோல் பணப்பலனாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்கலாம் என்றும் டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன” என்கிறார்கள்.

இந்தத் தகவல் போலீஸாருக்குள் மெல்ல மெல்ல பரவி, விருப்ப ஓய்வுக்கு முயன்ற போலீஸார் பலர் பின் வாங்கி வருகிறார்கள். விரைவில் ஏட்டய்யாக்களுக்கு ஜாக்பாட் அடிக்கலாம்!

-வணங்காமுடி.

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 3 அக் 2021