மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி மம்தா பானர்ஜி

இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

2021 மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக பெரும் வெற்றி பெற்று மம்தா ஆட்சி அமைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.

கடந்த ஆட்சியின் இறுதியில் மேற்கு வங்காளத்தில் திருணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அவர்களின் குற்றப் பின்னணியை வைத்து மிரட்டி பாஜக தன் பக்கம் இழுத்ததாக புகார்கள் எழுந்தன. அப்படியாக பாஜக பக்கம் போன திருணமூல் தலைவர்களில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சுனந்து அதிகாரியும் ஒருவர். இதனால் கோபமான மம்தா கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான பவானிபூர் தொகுதியில் போட்டியிடாமல், தனது கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற சுனந்து அதிகாரியின் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார், சுனந்து அதிகாரி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார், இந்தத் தேர்தல் முடிவில் சர்ச்சைக்குரிய வகையில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து திருணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதால்... பவானிபூர் தொகுதியில் வென்ற மூத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஷோவந்தேவ் சட்டோபாத்யாயா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். எனவே மீண்டும் பவானிபூரில் போட்டியிட்டார் மம்தா.

செப்டம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலையில் (அக்டோபர் 3) வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 21 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருக்கிறார்.

முதல் சுற்று முடிவில் சுமார் மூவாயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற மம்தா பானர்ஜி பகல் 12.30 மணி நிலவரப்படி 11 ஆவது சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு எதிராக 34 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். மம்தா பானர்ஜியின் வீட்டை நோக்கி முக்கிய தலைவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். திருணமூல் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மம்தா இறுதிச் சுற்று முடிவில் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று அவரது கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 3 அக் 2021