மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

கொரோனா மரணம்: 87% தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்!

கொரோனா மரணம்: 87% தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்!

தமிழக அரசு கொரோனா தடுப்பூசியை அனைத்து தரப்பினருக்கும் செலுத்த வேண்டும் என்பதற்காக தீவிரமான செயல்வேகத்தில் இருக்கிறது. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் என்ற பேதம் இல்லாமல் தடுப்பூசிக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டமும் தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை தலைமைச் செயலாளர் அண்மையில் தர வரிசைப் பட்டியலாகவே வெளியிட்டார்.

இந்த நிலையிலும் கணிசமான சிலர் தடுப்பூசியை தவிர்த்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் நேற்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள வீடியோவில் ஓர் அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார்.

“தமிழக அரசு தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி மரணத்தைத் தவிர்க்கிறது. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த 2 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஆயிரத்து 626 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் ஆயிரத்து 419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். அதாவது 87% பேர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாதவர்கள். ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மிகக் குறைவானோரே இறந்திருக்கிறார்கள். இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள் 4% மட்டுமே. மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 % பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.

கடந்த 2 மாதங்களில் 88 ஆயிரத்து 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 50% பேர் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 45% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நலம் பெற்றுள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 816 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 405 பேர், அதாவது 76% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.

எனவே பொதுமக்கள் தங்களது நலன் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்”என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 3 அக் 2021