மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

வன்னியர்களுக்கு மட்டுமே 10.5% அல்ல: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ்

வன்னியர்களுக்கு மட்டுமே 10.5% அல்ல: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ்

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு அளித்து கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிக்கைக்கு சில மணி நேரம் முன்னதாக தற்காலிக சட்டம் கொண்டுவரப்பட்டது. அடுத்து தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த திமுக, இந்தச் சட்டத்தை உறுதி செய்து அரசாணை பிறப்பித்தது. இதன் மூலம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு உறுதியானது.

தமிழக அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. எம்பிசி பட்டியலில் இருக்கும் வன்னியர் அல்லாத பிற சாதியினர் பொதுநல வழக்குகளைத் தொடுத்தனர். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் வாதாடினார்கள். இந்த நிலையில் இந்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்று தமிழக அரசு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் சார்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ராமதாஸ் தன் பதில் மனுவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989ஆம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையிலும், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட இந்தத் தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,

“இந்த இட ஒதுக்கீட்டை முந்தைய அதிமுக ஆட்சி கொண்டுவந்தது. அதை இப்போது அமைந்திருக்கும் திமுக ஆட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இரு வேறு ஆட்சிகளில் கொண்டுவரப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்தே இந்தச் சட்டத்தில் எவ்வித அரசியல் உள் நோக்கமும் இல்லை என்பது தெரிகிறது.

மேலும் 10.5 சதவிகிதம் என்பது வன்னியர்களுக்கு மட்டுமானதே அல்ல. வன்னியகுல சத்திரியர் பிரிவில் 7 சாதியினர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சேர்த்துதான் இந்த இட ஒதுக்கீடு. மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அடிப்படையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து மனுதாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்று ராமதாஸ் தன் பதில் மனுவில் கூறியிருக்கிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 3 அக் 2021