மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

காமராஜர் நினைவிடத்துக்கு சோனியா, ராகுல் வந்ததுண்டா? அண்ணாமலை

காமராஜர்  நினைவிடத்துக்கு சோனியா, ராகுல் வந்ததுண்டா? அண்ணாமலை

இன்று (அக்டோபர் 2) காந்தியின் பிறந்தநாள் மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளும் கூட.

இதை ஒட்டி பல அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு தங்கள் மரியாதையை செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கிடைத்த மிக உயர்ந்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான காமராஜரை இன்று தேசம் நினைவுகூர்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்தல் போன்ற சமூக மாற்றத்துக்கான காமராஜரின் கொள்கைகள் இன்றும் நம் நாட்டின் தவிர்க்க முடியாதவையாக நீடிக்கின்றன, காங்கிரஸ் வீரரை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக பாஜக சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை, இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோரோடு சென்று காமராஜருக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பின் அண்ணாமலை, " இன்று கர்மவீரர் காமராஜர் ஐயாவின் நினைவிடத்திற்கு சென்று இருந்தபோது அவருடைய சமாதியின் நிலையை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் காமராஜர் அவர்களை முற்றிலும் புறக்கணித்து விட்டது. காமராஜர் அவர்களுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்த மண்ணின் மைந்தர் உடைய வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் உள்ளடக்கிய அவர்களது புகழுக்கும் சிறப்புக்கும் ஏற்ற நினைவிடம் அமைக்க தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

காமராஜரை ஒரு சிறு வட்டத்துக்குள் அடைத்து சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ இதுவரை காமராஜர் ஐயா அவர்களின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியதில்லை என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம். உண்மையான மரியாதை என்பது வெறும் வாய் சொல்லில் இருக்கக்கூடாது செயலில் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி காமராஜர் அவர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 2 அக் 2021