மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

தடுப்பூசியில் வெற்றி பெற்றிருக்கிறோம்: பிரதமர் மோடி

தடுப்பூசியில் வெற்றி பெற்றிருக்கிறோம்: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தியாவின் சுயசார்பு கொள்கைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஓபன் என்ற பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ” நாம் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள். உலகில் பெரும்பாலான மக்கள் தொகைக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால்,இந்தியா கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சுய சார்பு கொள்கை தான் முக்கிய காரணம்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது செலுத்திக் கொண்டுள்ளனர். 25 சதவிகிதத்தினர் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டனர். தகுதியுள்ள அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மக்கள் இயக்கமாக மாறியிருப்பது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியை அடைவதற்கு மக்கள் எடுத்த முயற்சிகளை குறித்து ஊடகங்கள் முன்னிலைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

உலகில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி செலுத்துவதில் பல வளர்ந்த நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், ஒருசிலர் இந்தியாவின் பெயரைக் கெடுப்பது மட்டுமே நோக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அனைத்து நாடுகளையும் சமமாக பாதிக்கும் ஒரு உலகளாவிய பேரிடர். இந்த சூழ்நிலையில், இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், இந்தியா தனது சகாக்கள் மற்றும் பல வளர்ந்த நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”நேர்மையான மனதுடன், விமர்சகர்களை மிகவும் மதிக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, விமர்சகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலான, மக்கள் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதற்கு காரணம், ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், ஒருவர் நிறைய கடின உழைப்பு, ஆராய்ச்சி போன்றவற்றை செய்ய வேண்டும். ஆனால், இன்றைய வேகமான உலகில், அதையெல்லாம் செய்வதற்கு மக்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். அதனால் சில நேரங்களில், நான் விமர்சகர்களை இழக்கிறேன்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021