மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

ஆட்கொல்லி புலியை சுட வேண்டாம்: வலுக்கும் எதிர்ப்பு!

ஆட்கொல்லி புலியை சுட வேண்டாம்: வலுக்கும் எதிர்ப்பு!

நீலகிரி ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மசினக்குடி மற்றும் கூடலூர் பகுதியில் சுற்றித் திரியும் டி 23 என்ற ஆண் புலி, இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளது. மனிதர்களை அச்சுறுத்தி வரும் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவ்வப்போது வனத் துறையினரின் கண்ணில்பட்டு, பின்பு மறைந்து போய், ஆடு புலி ஆட்டம் காட்டி வருகிறது அந்தப் புலி.

இந்நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி புலியை சுட்டுக் கொல்வதற்காக பிரத்யேகப் பயிற்சிபெற்ற 20 பேர் அடங்கிய ஐந்து அதிரடிப்படைக் குழுவினர், ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் முறையாக அதவை என்னும் மோப்பநாய் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆட்கொல்லி புலி நடமாடும் அதே இடத்தில் நான்கு புலிகளின் நடமாட்டம் உள்ளதால் வேறு புலியை சுட்டு விடக் கூடாது என்பதால் ஆட்கொல்லி புலியின் புகைப்படத்தை காண்பித்து அதன் அடையாளங்களை வைத்து சரியாக சுட வனத் துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.புலியைச் சுட்டுப்பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் வனப் பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்க்கச் செல்ல வேண்டாம் எனவும் வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், புலியை சுட்டுக் கொல்ல பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சமூக வலைதளங்களில் #SaveT23 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அதுபோன்று இன்று(அக்டோபர் 2) காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொல்லி புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம். புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது. அதை ஒற்றைப் புலி என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த விஷயமாகக் கருத வேண்டும். தமிழ்நாடு வனத் துறை மிக கவனமாகச் செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில்,” மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021