மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

“நேரு அண்ணன் பாலமா இருக்காரு” - வீரபாண்டி ராஜாவின் கடைசி நம்பிக்கை!

“நேரு அண்ணன் பாலமா இருக்காரு” - வீரபாண்டி ராஜாவின் கடைசி நம்பிக்கை!

திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுகவில் பலரையும் ஆற்ற முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று அக்டோபர் 2 ஆம் தேதி தனது பிறந்தநாளை ஒட்டி விருந்துக்கெல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார் வீரபாண்டி ராஜா. தனது தந்தை இருக்கும் வரையிலும் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரிடம் ஆசி வாங்கும் ராஜா, தந்தையின் மறைவுக்குப் பின் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டுத்தான் தனது பிறந்தநாள் நிகழ்வுகளையே தொடங்குவார்.

இன்றைக்கும் அதேபோல சேலம் புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் திமுக அலுவலகத்தில் அமைந்துள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்படும்போது மயங்கி விழுந்திருக்கிறார். லோ பிபி என நினைத்து உடனடியாக அவரை காரில் ஏற்றி பக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க கொண்டுபோகும்போதே ராஜாவின் உயிர் மாரடைப்பால் பிரிந்துவிட்டது.

“சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுப்பு போன்ற காரணங்களால் விரக்தியில் இருந்த வீரபாண்டி ராஜா கடந்த சில தினங்களாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம், முதன்மைச் செயலாளர் நேரு மீது நம்பிக்கையாக சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

கடந்த வருடம் பிறந்தநாளுக்கு கொரோனா காரணமாக யாரையும் சந்திக்காத ராஜா, அதன் பின் கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி திருச்சி சென்று நேருவை சந்தித்தார். அதன் பின் பலமுறை நேருவை சந்தித்துப் பேசிவந்தார்.

‘நேரு அண்ணன் தான் எனக்கும் தலைவருக்கும் நல்ல பாலமாக இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும்னு சொல்லியிருக்கிறார். அதனால் நம்பிக்கையாக இருப்போம்’என்று சொல்லிவந்தார்.

கே. என். நேருவுக்கு வீரபாண்டி ஆறுமுகம் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதுபோலவே அதிரடியாக துடிப்பாக செயல்படும் ராஜா போன்ற கட்சி நிர்வாகிகளை நேருவுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ராஜாவுக்காக தலைவர் ஸ்டாலினிடம் பேசியிருந்தார். விரைவில் நல்ல செய்தி வரும் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்றைக்கு அவரது பிறந்தநாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே... “என்று கதறுகிறார்கள் ராஜாவுக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021