மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

பாப்பாபட்டி கிராமத்திற்கான முதல்வரின் அறிவிப்புகள்!

பாப்பாபட்டி கிராமத்திற்கான முதல்வரின் அறிவிப்புகள்!

முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் 615 நாட்களுக்கு பிறகு இன்று(அக்டோபர் 2) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிற 9 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

இதைடுத்து பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடத்திற்கு சென்ற முதல்வர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், தாங்கள் கிராமத்திற்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்து ஆண்கள் சார்பில் மூன்று பேரும், பெண்கள் சார்பில் மூன்று பேரும் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”பாப்பாபட்டியில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்றதில் மகிழ்ச்சி. கிராமம்தான் இந்தியா என்று கூறியவர் காந்தி என்று மதுரையுடன் மகாத்மா காந்திக்கு உடைய தொடர்பு குறித்து பேசினார். பின்பு, தான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு பாப்பாபட்டியில் நடந்த தேர்தல் குறித்த நினைவலைகளை பகிர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,” திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதிகளில் சொன்னதும் சொல்லாததையும் நிறைவேற்றியுள்ளோம். இது சாமானியர்களுக்கான ஆட்சி. இது எனது அரசு அல்ல; நமது அரசு.

நீங்கள் வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தற்போது உங்களை மகிழ்விக்கக் கூடிய திட்டங்கள் சிலவற்றை கூறுகிறேன்.

மதுரை பாப்பாபட்டியில் , ரூ.23.5 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் ,பாப்பாபட்டி, மகாதேவன் பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை மற்றும் மகாதேவன்பட்டியில் 30 லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டித்தரப்படும்.

கல்லுபட்டி, மகாதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். 6 லட்சம் மதிப்பில் கதிர் அறுக்கும் களம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வேன். இந்தளவுக்கு ஆர்வமாக கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் வந்திருப்பது மகிழ்ச்சி” என்று பேசி முடித்தார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 2 அக் 2021